கோத்தாவிடமே பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கோத்தாபய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சு தம்வசமே இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

அனுராதபுர ருவன்வெலிசயவில் நேற்று நண்பகல் பதவியேற்றுக் கொண்ட பின்னர், உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்ட அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக, முப்படைத் தளபதிகளின் அதிபதியாக, பாதுகாப்பு அமைச்சராக தானே பதவி வகிப்பேன் என்றும் கூறினார்.

தேர்தல் அறிக்கையின் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக, புதிய அரசாங்கத்தை விரைவில் அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!