ஹாங்காங் போராட்டம்: பல்கலைக்கழகத்தில் பொருட்களுக்கு தீவைத்த மாணவர்கள்!

சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹாங்காங்கில் பல்கலைக்கழக மாணவர்கள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். கிரிமினல் குற்றவாளிகளை சீனாவிற்கு நாடு கடத்த எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதிய சட்ட மசோதாவை கைவிடுவதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்த போதும், சீனாவிடம் இருந்த சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடுவதால் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர் போலீசார்.

ஆனால் போலீசார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களைக் கட்டுப்படுத்த சீன ராணுவத்தினரும், ஹாங்காங் போலீசாரும் சுற்றி வளைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் பொருட்களை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!