ஏழு பைகளில் நிரப்பப்பட்ட மனித உடல் பாகங்கள்.. சில்லிட வைக்கும் கடிதம் ஒன்றுடன் சாலையில் கண்டெடுப்பு…?

மெக்ஸிக்கோ நாட்டில் பரபரப்பான சாலை ஒன்றில் ஏழு பைகளில் நிரப்பப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தலை மற்றும் கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்களுடன் சில்லிட வைக்கும் கடிதம் ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர்.

சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்த அந்த கடிதமானது பெயர் பட்டியல் என கூறப்படுகிறது. மேலும், போதை மருந்து விற்பனை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.எச்சரிக்கையை மீறி குறிப்பிட்ட போதை மருந்தை விற்பனை செய்யும் கும்பலை தேடி வந்து தாக்க இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிஸார், கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களை மருத்துவ சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.இருப்பினும் இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் கைது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!