உதவியாளர் ஆக்கப்பட்டார் சிஜடி பணிப்பாளர்!

பல முக்கியமான குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வு அதிகாரியான, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக சி.ஐ.டி.யின் குற்றப் புலனாய்வாளராக கடமையாற்றி வரும் ஷானி அபேசேகர, சி.ஐ.டி. பொறுப்பதிகாரியாக, உதவி பொலிஸ் அத்தியட்சராக, பொலிஸ் அத்தியட்சராக, பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்த நிலையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக தரமுர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2017 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி சி.ஐ.டி.யின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜூதீன் கொலைகள், பிரகீத் எக்னெலிகொட , 11 பேர் கடத்தப்பட்ட காணாமல் ஆக்கபபட்ட சம்பவங்களை புலனாய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!