இடைக்கால அரசில் சமலுக்கும் அமைச்சர் பதவி?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் இன்று 15 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவிக்கு மேலதிகமாக கொள்கை திட்டமிடல், பொருளாதார விவகாரங்கள், நகர அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வெளிநாட்டு விவகார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெலவும், நிதி அமைச்சராக பந்துல குணவர்தனவும், விவசாயம் மற்றும் மின்சார அமைச்சராக சமல் ராஜபக்ஷவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!