வீட்டருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தை பலி!

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே குடிநீர் இணைப்பில் தண்ணீர் பிடிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை பரிதாபமாக பலியானது. பனையூர் கிராமத்தை சேர்ந்த முத்து – தமிழரசி தம்பதியர் வீட்டருகே தண்ணீர் பிடிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் தங்களது இரண்டரை வயது பெண் குழந்தையை நீண்ட நேரமாக காணததால் தேடிப்பார்த்த தம்பதியர், குழந்தை பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கியிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அப்பகுதிகளில் முறையான குடிநீர் விநியோகம் இல்லை என்று கூறி இப்படி ஆபத்தான முறையில் பள்ளங்கள் தோண்டி தண்ணீர் பிடித்து வருவதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!