நாயின் எச்சில் பட்டதால் -பரிதாபமாக உயிரிழந்த எஜமானர்…?

நாயின் உமிழ்நீர் பட்டதால் நோய்த்தொற்று ஏற்பட்ட எஜமானர் தீவிர சிகிச்சைக்கு பின்னரும் கூட பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.ஜேர்மனியை சேர்ந்த அடையாளம் தெரியாத 63 வயதான ஒருவர், மூன்று நாட்களாக காய்ச்சல், சுவாச பிரச்சனைகள், இளைப்பு போன்ற அறிகுறிகள் தென்படுவதாக கூறி மருத்துவனைக்கு சென்றுள்ளார்.அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், கடுமையான செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து தீவிர சிகிச்சை அளிக்கஆரம்பித்தனர்.

அவரது முகத்தில் ஒரு சொறி, நரம்பு வலி மற்றும் அவரது கால்களில் காயங்கள் என துவங்கி முதல் மூன்று நாட்களிலே அவருடைய நிலை கணிசமாக மோசமடைந்துள்ளது.அவரது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் மூடல் மற்றும் இரத்த நாளங்களில் இரத்தம் உறைதல், தோல் அழுகல் என சிறிது சிறிதாக மாரடைப்புக்கு வழிவகுத்தது.நிமோனியா, குடலிறக்கம் மற்றும் 41 ° செல்ஸியஸ் காய்ச்சல் என அடுத்தடுத்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட அந்த நபர், இரண்டு வாரங்களாக அவஸ்தையடைந்து உயிரிழந்துள்ளார்.இறுதியில் அந்த நபர் கப்னோசைட்டோபாகா கேனிமோர்சஸ் என்கிற பாக்டீரியாவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

நாய்கள் கடித்தாலோ அல்லது நக்கினாலோ பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் மீது இந்த தொற்று எளிதாக பரவி விடும்.அதனால் சுவாசப் பிரச்சினைகள் மற்றும் சொறி உள்ளிட்டவைகள் ஏற்பட்டால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவக்குழு எச்சரித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!