மூன்று இளைஞர்களின் உயிரை காவு வாங்கிய இயர்போன்!

சமீப காலமாக இயர்போனை பயன்படுத்தி பாட்டு கேட்கும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அவ்வாறு இயர்போன் பயன்படுத்துவது அடுத்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சாலையில் செல்லும் போது இயர்போன் பயன்படுத்துவதால் பின்னால் வரும் வாகனங்களை சரியாக கவனிக்க முடியாமல் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இப்படிப்பட்ட விபத்துகளில் உயிர் சேதமும் ஏற்படுகிறது.

அதுபோன்ற ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் நேற்று நடந்துள்ளது. அங்குள்ள கிலா பகுதியில் உள்ள சுவாலெங்கார் ரெயில்வே கிராசிங் பகுதியில் மூன்று இளைஞர்கள் காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டபடி ரெயில் டிராக்கில் நடத்து சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த டிராக்கில் விரைவு ரெயில் ஒன்று வந்துள்ளது. அந்த ரெயில் ஓட்டுனர், ஹாரன் அடித்து அந்த இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அந்த இளைஞர்கள் காதில் இயர்போன் மாட்டியிருந்ததால் அவர்களுக்கு ஹாரன் சத்தம் கேட்கவில்லை. அதனால் டிராக்கில் இருந்து விலகாமல் இருந்துள்ளனர்.

அந்த ரெயில் அவர்கள் அருகில் வந்த பொழுதும் அவர்கள் டிராக்கை விட்டு விலகாமல் இருந்துள்ளனர். இதனால் அவர்கள் மூவர் மீதும் ரெயில் ஏறியது. இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் ஷாகித் (25), டேனிஷ் (22), ராஜேந்திரா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இயர்போன் மாடிக்கொண்டு பாட்டுக்கெட்டபடி சென்றதால் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!