யாழ். பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் நுழையத் தடை

மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதை தடை செய்யும் நோக்கில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு, நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக யாழ். பல்கலைக்கழக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியான பேராசிரியர் கந்தசாமி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், பல்கலைக்கழக வளாகத்துக்கு மாணவர்கள் நுழைவதில் இருந்து விலகி இருக்குமாறும், அனுமதி அளிக்கப்படாத நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, நேற்றும், இன்றும் பல்கலைக்கழக சூழலில் நினைவு நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதில் இருந்து மாணவர்களை விலகி இருக்குமாறு அவர் அறிவித்திருந்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை தடை செய்வதற்காகவே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 65 ஆவது பிறந்த நாள் மாணவர்களால் கேக் வேட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!