தடைகளை உடைத்து யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகம் விதித்திருந்த தடையை மீறி, படலையை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மாணவர்கள் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை உணர்வுபூர்வமான முனையில் நடத்தியுள்ளனர்.

மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் செய்திருந்த நிலையிலேயே பல்கலைக்கழக நிர்வாகத்தால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் தடைகளை மீறி நுழைந்துள்ளனர்.

அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து, இன்று பிற்பகல் 2 மணியுடன், கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேறுமாறு நிர்வாகம் பணித்துள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இன்று பிற்பகல் 2 மணியுடன் மூடப்படுவதாகவும் அனைத்து உத்தியோகத்தர்களையும் வெளியேறுமாறு தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி பணித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!