வற் வரி குறைப்பு – முக்கிய வரிகள் ரத்து!

வற் வரி 15 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த வரி குறைப்பானது டிசெம்பர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

அத்துடன், தேசத்தை கட்டியெழுப்பும் வரி (NBT), உழைக்கும்போதே செலுத்தும் வரி (Payee Tax), வட்டிக்கான பிடித்து வைத்தல் வரி (With Holding Tax) ஆகியவற்றை உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும், அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!