சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கள் பொய் – திஸ்ஸ

வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களின் விசாரணையில் சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சுவிசர்லாந்து தூதரகத்தில் வீசா பிரிவில் பணிபுரிந்துவந்த பெண்ணை இனந்தெரியாத சிலர் வெள்ளை நிர வாகனத்தில் ஏற்றி அவரை இரண்டு மணித்தியாலங்கள் வரை விசாரித்ததாகவும் அவரின் கையடக்கத்தொலைபேசியை பரிசோதித்துள்ளதாகவும் விசாரிக்கும்போது குறித்த பெண்ணை அச்சுறுதியுள்ளதாவும் சுவிட்சர்லாந்து தூதுவர் குற்றம்சாட்டியிருந்தார்.

தூதுவரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண் முறைப்பாடு எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இவ்வாறான நிலையில் தூதுவரின் குற்றச்சாட்டு தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையோன்றை விடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் கருணாரத்ன ஆகியோர் இணைந்தே இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த அறிக்கையிலே சுவிசர்லாந்து தூதுவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யென உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!