40 ஐ தொடவுள்ள இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை!

மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. பதுளை மாவட்ட எம்.பி. டிலான் பெரேரா, குருநாகல் மாவட்ட எம்.பி. டி.பி. ஏக்கநாயக்க ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

தற்போது, கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் 15 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 38 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி அமைச்சர்களின் எண்ணிக்கை 53 ஆகும்.

19 வது திருத்தத்தின் 46 (1) வது பிரிவின்படி, மொத்தம் 70 அமைச்சர்களை நியமிக்க முடியும், இதில் 30 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!