சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டார் சபாநாயகர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை அங்கீகரிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

ஐதேக தலைமையகத்தில் நேற்று நடந்த ஐதேகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவின் பெயரை, ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்தார்.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை அங்கீகரிக்குமாறு சபாநாயகருக்கு, ஐதேக பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் கடிதம் அனுப்பினார்.

இந்தக் கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், எதிர்வரும் ஜனவரி 3ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும் போது, சபாநாயகரின் அதிகாரபூர்வ அறிவிப்புக்குப் பின்னர், இந்த நியமனம் நடைமுறைக்கு வரும் என்றும், சபாநாயகர் செயலகம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!