ரணிலின் ஐதேக தலைவர் பதவிக்கும் ஆப்பு

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக ஐதேக தலைவர் பதவி குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர், சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரணில் விக்ரமசிங்க விட்டுக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஐதேக தலைவர் பதவியையும் அவரிடம் இருந்து பிடுங்கும் முயற்சிகளில் சஜித் ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர்.

அடுத்த வாரமளவில், ஐதேக தலைவர் பதவி தொடர்பாக தீர்மானிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அடுத்தகட்டமாக ஐதேக தலைவர் பதவி குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்டி டி சில்வா தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!