சிறிலங்கா அரச புலனாய்வு சேவை தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி

சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளார் என நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக இருந்த பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தன, காவல்துறை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையிலேயே, பிரிகேடியர் சுரேஸ் சாலி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிகேடியர் சுரேஸ் சாலி சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக பணியாற்றியவர்.

2016இல் அவர், இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டு, மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!