இன்றைய ராசி பலன் (2016.04.08)

astrology
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்னைகள் தலைதூக்கும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

மிதுனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.

கடகம்: உணர்ச்சிப்பூர் வமாக பேசுவதைவிட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உதவுவார்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மகிழ்ச்சியான நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடங்குவதால் அவசர முடிவு கள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். விட்டுக் கொடுத்து போக வேண்டிய நாள்.

துலாம்: சவாலான விஷயங் களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப் பார்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்: இதமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத் யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.

மகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பணப்பற்றாக்குறையை சாமர்தியமாக சமாளிப்பீர் கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக் கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும்நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்

Tags: