இறந்துபோன பெண் 6 மணி நேரம் கழித்து உயிருடன் எழுந்த அதிசயம்..! நடந்தது என்ன….?

ஸ்பெயின் நாட்டில் பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் 6 மணி நேரம் கழித்து உயிருடன் எழுந்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ஆட்ரே மாஷ். 34 வயதாகும் இவர் தனது கணவருடன் சேர்ந்து மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, கடும் பனிப்பொழிவு காரணமாக , திடீரென்று அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.இதனால், பதறிப்போன கணவர் ஆட்ரேவை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், ஆட்ரே வை சோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், செய்வதறியாது முழித்த ஆட்ரேவின் கணவர், 6 மணி நேரம் ஆகிய நிலையில் திடீரென்று ஆட்ரே மாஷ் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்து, அவர் மூச்சு விடுவதை பார்த்துள்ளார்.இதைத்தொடர்ந்து, உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவித்து ஆட்ரேவிற்கு சீரான மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆட்ரே நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மருத்துவர் கூறியதாவது, அட்ரேவின் உடலில் சாதாரண வெப்பநிலை நீடித்திருந்தால், அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை, தாழ் வெப்பநிலை காணப்பட்டதால் தான் அவரது மூளை பாதிப்படையாமல் இருந்துள்ளது.அதனால், தான் அவர் 6 மணி நேரம் கழித்து உயிர் பிழைத்துள்ளார்.இவ்வாறு, 6 மணி நேரம் இதயம் துடிக்காமல் இருந்து, ஒருவர் உயிர் பிழைத்துள்ளது இதுவே முதன்முறை என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!