கொழும்பு வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ரொஷிமிட்சு மொடேகி இந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 14ஆம் நாள் தொடக்கம் 17ஆம் நாள் வரை, சிறிலங்கா மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ரொஷிமிட்சு மொடேகி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

முதலில் சிறிலங்காவுக்கு வரும் அவர் அடுத்து ஸ்பெய்னுக்கு செல்லவுள்ளார்.

சிறிலங்கா வரும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், ரொஷிமிட்சு மொடேகி, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சிறிலங்காவுக்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் தேசிய நல்லிணக்கத்துக்கான பங்களிப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!