இன்றைய ராசி பலன் (2016.04.10)

astrology_planet_chartமேஷம்
கடந்த 2 நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

மிதுனம்
எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் பிரச்னைகள் வந்து செல்லும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கடகம்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

சிம்மம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி
கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையென்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்
மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு
உங்களிடம் பணப்புழக்கம் அதி கரிக்கும். பழைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஷேர் பணம் வரும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். அமோகமான நாள்.

மகரம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை உட்கொள்ளுங் கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்
எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. உழைப்பால் உயரும் நாள்.

மீனம்
உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப் பார்கள். பிரபலங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் சம்பாதிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

Tags: