இந்திய குடியுரிமை மறுக்கப்பட்டது பாதிப்பல்ல! – என்கிறார் விக்கி

இந்தியாவில் வசித்து வருகின்ற இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாக உள்ளது என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அகதிகளாக வசிக்கின்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான சட்டமூலம் நேற்றுமுன்தனம் இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்போது இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து வெளியிடும்போதே விக்னேஸ்வரன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வசிக்கின்ற இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாதுள்ளமை ஒரு பாதிப்பான விடயமாக கருத முடியாது. மேலும் வடக்கு, கிழக்கு மக்களுக்கான தீர்வினை விரைவிலேயே பெற்றுக்கொடுக்க இந்தியா உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!