சுவிசில் புகலிடம் தேடிய நிசாந்த சில்வா விவகாரம் – சிறிலங்கா அரசு விரைவில் முடிவு

சிறிலங்கா காவல்துறையின் குற்ற விசாரணைப் பிரிவின் ஆய்வாளர் நிசாந்த சில்வா சுவிட்சர்லாந்தில் புகலிடம் தேடியுள்ள விவகாரம் தொடர்பாக, எதிர்கால நடவடிக்கை குறித்து சிறிலங்கா அரசாங்கம் விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிஸ் தூதுரக அதிகாரி கடத்தப்பட்டது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், நிசாந்த சில்வா விவகாரத்தையும் எழுப்புவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எனினும், இந்த விவகாரத்தின் சிக்கலான தன்மை கருதி, இறுதி முடிவு எடுக்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், நாட்டை விட்டுச் சென்ற நிசாந்த சில்வாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படக் கூடும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!