தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருநாள் உடையும் – கருணா

எனக்கு தெரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருநாள் உடையும் எனத் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் பொத்துவில், கோமாரி, ஊரணி ,பகுதியில் உள்ள பெண்கள் சமாசம், விளையாட்டு கழகங்கள், இளைஞர்கள் அமைப்பு, உள்ளிட்ட தரப்பினருடன் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான நேற்று மாலை 5 மணி முதல் 8 மணிவரை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும்.

கடந்த ஜனாதிபதித்தேர்தலில் நாங்கள் தமிழ் மக்களுக்கு விடிவு வேண்டும் என்பதற்காக முயற்சிகளைச் செய்தோம். மூழ்கப் போகும் கப்பலில் பயணிக்க வேண்டாம் ஓடும் கப்பலிலே பயணிக்கவேண்டும் என மேடைகளில் உரக்கக்கூறினோம் .

அது பற்றிய தெளிவு அப்போது தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.ஜனாதிபதி கோத்தபாயவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் உணரத்தொடங்கி இருக்கிறார்கள் . இது ஒரு நல்ல விடையம். நாம்வெற்றியின் பங்காளராக இருக்கும் போதுதான் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள அரசிடம் வாதிடும் சக்தியாக மாறமுடியும்.

சஜித் பிரேமதாச அவருடன் இருந்தவர்கள் துவேஷம் பிடித்த முஸ்லிம் தலைவர்கள் அவர்கள் தமிழ் மக்களைகாடேற்ற முற்பட்டனர். இனவாதம் பிடித்த முஸ்லிம் தலைவர்கள் இருந்த இடத்திலே தமிழ்தலைமைகளும் இருந்து கொண்டு ஏன் சஜித் பிரேமதாசவை ஆதரித்தார்கள் என்று இன்னும் எனக்குப்புரியவில்லை .இது ஒரு வரலாற்றுப்பிழை இந்தவரலாற்றுப் பிழைகளை இனிவரும் காலங்களிலும் நாம் விட்டு விடக்கூடாது.

கடந்த ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலம் தமிழர்களுக்குக் கிடைத்த சாபக்கேடு. அவரை ஆட்சி அதிகாரத்தை கொண்டு வந்தவர்கள் தமிழ் மக்கள் .அவர் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை மாறாகத் துரோகத்தை மாத்திரமே செய்தார் அவரால் ஒரு அரசியல் வாதிகள் கூட வெளியில் விடமுடியவில்லை .

இன்று கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தவுடன் அரசியல் கைதிகளை விடுவித்து வருகிறார். நான் ஏன் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை உருவாக்கினேன் என்றால் எனக்கு தெரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருநாள் உடையும் . ஏனெனில் அது ஒரு ஆணித்தரமான கட்சி அல்ல .

அதுஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியும் அல்ல அவர்கள் பதிவு செய்யப் போவதுமில்லை. தமிழரசு கட்சியின் கீழ் தான் ஒன்றாகவிருக்கின்றனர். அவர்களின் உடைவை நிமிர்த்தக் கூடிய கட்சி தேவையென்பதால் தான் தமிழர் ஐக்கிய சுதந்திரமுன்னணியை உருவாக்கி தமிழர் எங்கெல்லாம் வசிக்கிறார்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் பயணம்செய்து கட்சியைப் பற்றியும் தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு குறித்தும் தெளிவுப்படுத்திவருகிறோம்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வேறு ஒரு வியூகத்தைவகுக்க வேண்டும். தேசியக் கட்சியுடன் சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் நாம் களம் இறங்குவோமானால் ஒரு ஆசனத்தைக்கூடப் பெறமுடியாது ஏனெனில் தேசிய கட்சியில் முஸ்லிம்கள் இடம்பெற்றிருப்பார்கள்.

தமிழர்களின் வாக்கும் அவர்களுக்கே செல்லும் இதனால் அந்த ஆசனம் சென்றடையும் இது ஒரு சனநாயக மரபு. அம்பாறையில் இருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் ஒருபொதுச் சின்னத்தில் அணிதிரள வேண்டும் அப்போது இரண்டு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறமுடியும். வெல்லவைத்துத் தருவது உங்கள் கடமை நீங்கள் வெல்ல வைப்பவரை நான்அமைச்சராக்குவேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!