தவறான மருந்தினால் பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை!

டெல்லியின் சதாரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் 2 வயது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் மருந்தகத்திற்கு (மெடிக்கல் ஷாப்) சென்று மருந்து வாங்கி கொடுத்துள்ளார். ஆனாலும் குழந்தையின் உடல்நலம் சரியாகவில்லை. இதனால் மீண்டும் மருந்து கடைக்கு சென்றுள்ளார். அக்கடையின் முதலாளி குழந்தைக்கு காய்ச்சல் குணமாக கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 12) ஊசி போட்டுள்ளார்.

அதன் பின்னர் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அக்குழந்தை ரத்த வாந்தி எடுத்துள்ளது. பதறிப்போன தாய் குழந்தையை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ‘இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எந்தவொரு நோயாக இருந்தாலும் முதலில் மருத்துவரை அணுகுவது நல்லது’ என போலீசார் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!