பிரித்தானிய பிரதமருக்கு மஹிந்த, ரணில் வாழ்த்து!

பிரித்தானியத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக் ருவிற்றர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், “நான் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். பொரிஸ் ஜோன்சனின் தீர்க்கமான தலைமை இந்த வெற்றிக்கு வழிவகுத்தது என்பதில் சந்தேகமில்லை. பிரதமராக இருந்து அவரது மிகச் சிறந்த சேவையை பாராட்டுகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கென்சர்வேற்றிவ் கட்சிக்கு வாழ்த்துத் தெரிவித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “பொரிஸ் ஜோன்சனுக்கு எனது வாழ்த்துக்கள்! கென்சர்வேற்றிவ் கட்சியின் பிரசாரத்தின் நிலைத்தன்மை பெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!