விக்னேஸ்வரனைக் கைது செய்யக் கோரி முறைப்பாடு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி, அவருக்கு எதிராக சிங்கள அமைப்பு ஒன்று சிறிலங்கா காவல்துறை தலைமையகத்திலும், குற்ற விசாரணைத் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்துள்ளது.

டான் பிரியசாத் தலைமையிலான நவ சிங்ஹலே தேசிய இயக்கம் என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது.

சி.வி.விக்னேஸ்வரன் சமூகங்களுக்கிடையில் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்துகிறார் என்றும் அவருக்கு எதிராக விசாரணைகளை நடத்துமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

சிறிலங்காவை பௌத்த நாடு என்று வரையறுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்று சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதுகுறித்து இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதுபோன்ற அறிக்கைகளின் மூலம், விக்னேஸ்வரன் அவ்வப்போது இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி வருகின்றார் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!