சுவிஸ் தூதரகப் பணியாளர் சிஐடியினரால் கைது

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிசை குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.

இன்று காலை குற்ற விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாகிய சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ், விசாரணைக்குப் பின்னர் மனநல சோதனைக்காக அனுப்பப்பட்டார்.

அங்கொடை மருத்துவமனையில் நடத்தப்பட்ட மனநல சோதனைகளை அடுத்து அவர் மீண்டும் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையானார்.

அதேவேளை, திரிபுபடுத்தப்பட்ட பொய்யான சாட்சியங்களை அளித்தார் என்ற குற்றச்சாட்டில், அவரைக் கைது செய்யுமாறு குற்ற விசாரணைத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் இன்று மாலை அறிவுறுத்தினார்.

இதையடுத்து, குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகளால், சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் விரைவில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!