சுவிஸ் அறிக்கை சிறிலங்காவுக்கு அவமானம் – பாலித ரங்கே பண்டார

தமது தூதரகப் பணியாளர் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து, சிறிலங்கா நடத்திய விசாரணையில் திருப்தி அடையவில்லை என்ற சுவிஸ் அறிக்கை, சிறிலங்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் . பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியல் பழிவாங்கும் சம்பவங்கள் மற்றும் இது போன்ற நிகழ்வுகளால், உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் இலங்கையர்கள் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!