சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு இயல்பான சூழலில் இடம்பெற்றதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தினால் பாதுகாப்புச் செயலராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்ட பின்னர், அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர் அவரைச் சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

எனினும் இந்தச் சந்திப்புத் தொடர்பாக அமெரிக்க தூதுரகம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!