ஜனாதிபதியின் முடிவு – சீனா வரவேற்பு!

அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில் சீனக்கம்பனியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீளாய்வு செய்யப் போவதில்லை என்று ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ கூறியதைத சீனா வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக சீனத் தூதரகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இலங்கையின் சுயாதிபத்தியத்தையும், ஆட்புல ஒருமைப்பாட்டையும் பெரிதும் மதிப்பதாக சீனா மீண்டுமொரு தடவை வலியுறுத்துகிறது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் இலங்கை அரசாங்கத்தினதும் அதன் கடற்படையினதும் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இல்ஙகையின் வேறு துறைமுகங்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் தொடர்பில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளிலிருந்து வேறுபட்டதாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் இருக்கப்போவதில்லை.

கொழும்பிலுள்ள வெளிநாட்டு செய்தியாளர்களைக் கடந்த 19 ஆம் திகதி சந்தித்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில் தற்போது நடைமுறையிலிருக்கும் உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்போவதில்லை என்பதையும், கைச்சாத்திடப்பட்ட வர்த்தக உடன்படிக்கை ஆட்சிமாற்றத்தின் விளைவாக மாற்றியமைக்கப்படப் போவதில்லை என்பதையும் தெளிவாகக் கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் கருத்துக்களைப் பெரிதும் மெச்சுகின்ற சீனா உடன்படிக்கையின் நடைமுறைப்படுத்தலைத் துரிதப்படுத்துவதற்கும், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் இலங்கைத் தரப்புடன் சேர்ந்து பணியாற்றுமாறு சம்பந்தப்பட்ட சீன நிறுவனங்களுக்கு வழிகாட்டலை வழங்கத் தயாராக இருக்கிறது.என்றும் அதில் கூறப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!