சம்பிக்க கைது – பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பிரதி சபாநாயகர் கடிதம்!

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்ட போது , பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படும் போது, பின்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான அறிவித்தல் கைது செய்யப்பட்டதற்கு அடுத்த நாளே தனக்கு எழுத்து மூலம் அனுப்பப்பட்டதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் கே. டபிள்யூ.ஈ.கரலியத்தவுக்கு நேற்று கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார்.

இக் கடித்தின் பிரதிகள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும், பதில் பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்ட போது வழமையாக பின்பற்றப்படுகின்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று நான் நம்புவதோடு, இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் இந்த கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!