காவலர்களை மீறி வந்த தொண்டரிடம் பரிவு காட்டிய பிரியங்கா காந்தி!

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் நிறுவன நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா வந்து நிர்வாகிகளுடன் அமர்ந்து இருந்தார். அப்போது ஒரு தொண்டர் பாதுகாவலர்களை மீறி பிரியங்கா காந்தி அருகே சென்றார். அப்போது பாதுகாவலர்கள் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். உடனே பிரியங்கா காந்தி பாதுகாவலர்களை அருகில் வரவேண்டாம் என கூறிவிட்டு தொண்டரிடம் பரிவோடு அவரின் கோரிக்கைகளை கேட்டறிந்து பின்னர் அவரிடம் கை குலுக்கி அனுப்பி வைத்தார்.

கூட்டத்தில் பேசும்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநிலத்தின் பிற எதிர்க்கட்சிகள் அதிகம் பேசவில்லை. ஆனால் நான் சொன்னது போல், நாங்கள் தனியாக செல்ல வேண்டியிருந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம், தொடர்ந்து குரல் எழுப்புவோம் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு செல்ல நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!