சர்ரே பகுதியில் சூட்டு கொல்லப்பட்ட இளைஞன் அடையாளங்காணப்பட்டார்!

சர்ரே பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் ஒன்றாரியோவை சேர்ந்த 18 வயதான கீஷான் பிரவுன் என பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர். 152 வீதியின் 2200 தொகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த திங்கட்கிழமை, இரவு 9:30 மணியளவில் குறித்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குறித்த சடலத்தை கண்டுபிடித்த போதே, இது சந்தேகத்திற்கிடமானது என தெரிவித்திருந்த பொலிஸார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீஷான் பிரவுன், பிரிட்டிஷ் கொலம்பியாவில் எவ்வளவு காலம் இருந்தார் என்பதையும் அவரது மரணத்திற்கு வழிவகுத்த நடவடிக்கைகள் குறித்தும் புலனாய்வாளர்கள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!