சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்..அதிர்ச்சி தகவல்..!!

கிழக்கு ஆப்பிரிக்கா சோமாலியாவில் நடந்த கோர சம்பவமான கார் வெடிகுண்டு தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.நாட்டின் தலைநகர் மொகாடிஷுவின் புறநகரில் உள்ள பரபரப்பான சாலையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் வெளியாகியுள்ளது.இந்த தாக்குதலில் 17 பொலிஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என 90 பேர் கொல்லப்பட்டதாக எம்.பி. அப்திரிசாக் முகமது கூறியுள்ளார்.

உயிரிழந்த வெளிநாட்டவர்கள் துருக்கியை சேர்ந்த பொறியாளர்கள் என உள்ளுர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.பரபரப்பான சாலையில் உள்ளுர் நேரப்படி காலை 7 மணிக்கு கார் குண்டு வெடித்துள்ளது. இதில், 60 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது வரை இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!