நடுவானில் மாயமான ஹெலிகாப்டர்…நடந்தது என்ன..!!

அமெரிக்காவில் 7 பேருடன் சென்ற மாயமான ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.வியாழக்கிழமை இரவு கவாயின் நா பாலி கடற்கரையைச் சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற யூரோகாப்டர் ஏஎஸ் 350 ஹெலிகாப்டர் நடுவானில் மாயமானது.ஹெலிகாப்டரில் விமானி, இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, ரேடாரில் இருந்து ஹெலிகாப்டர் விலகியதை அடுத்து தேடும் பணி விரைவில் தொடங்கியது, ஆனால் மோசமான வானிலை காரணமாக தடைபட்டது.ஹெலிகாப்டர் காணாமல் போனபோது பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அருகிலுள்ள சிறிய தீவான கவாய் என்ற மலைப்பகுதியில் ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.ஹவாயில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த 6 பேரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மேலும் விவரங்களை வெளியிடுவதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்களை அதிகாரிகள் தொடர்பு கொள்ள உள்ளதால், ஏழாவது நபர் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!