கரை ஒதுங்கிய மர்ம படகு பீதியில் ஜப்பான் பொது மக்கள்..!!

ஜப்பானின் வடமேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சாடோ தீவில்க மர்ம படகுஒன்று கரை ஒதுங்கியுள்ளது. வெட்டி நொறுக்கப்பட்ட நிலையில் மனித உடல் பாகங்களுடன் வடகொரிய நாட்டைச் சேர்ந்த மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் பீதியை கிளப்பியுள்ளது.உள்ளூர் நேரப்படி பகல் 9.30 மணியளவில் பொலிசார் குறித்த படகை சோதனையிட்ட போதே அதில் வெட்டப்பட்ட நிலையில் இரண்டு மனித தலை மற்றும் ஐந்து மனித உடல் பாகங்களும் கண்டறியப்பட்டது.

இவர்களின் மரணத்திற்கு காரணம் தொடர்பாக பொலிசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளனர்.துண்டிக்கப்பட்ட தலை இரண்டும், மீட்கப்பட்ட உடலின் தலையா என்பது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முழுமையான விசாரணை மற்றும் மருத்துவ சோதனைகளுக்கு பின்னரே உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட உடல் பாகங்கள் அனைத்தும் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால், குறித்த படகானது மிக அதிக நாட்கள் கடலில் அலைந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.படகில் எண்களும் பெயர்களும் கொரிய மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நேரம் குறித்த படகை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஆனால் அந்த படகானது கரை ஒதுங்கும் வரை, அதாவது சனிக்கிழமை வரை காத்திருந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் சாடோ தீவில் கரை ஒதுங்கும் இரண்டாவது படகு இதுவென கூறப்படுகிறது.ஜப்பான் கடற்கரை பகுதிகளில், வடகொரிய மர்ம படகுகள் கரை ஒதுங்குவது சாதாரணமாக நடைபெறுவதாகும்.

குளிர்கால மாதங்களில் பட்டினியாலும், பிழைப்புக்கு வழியின்றியும் இதுபோன்ற படகுகளில் கொலை நடப்பது வாடிக்கையாக பார்க்கப்படுகிறது.ஆனால், இதுபோன்ற படகுகளில் பெரும்பாலும் நாட்டைவிட்டு வெளியேறுபவர்கள் எனவும், வடகொரிய உளவாளிகள் எனவும் கூறப்படுவதும் உண்டு.ஏழ்மையும் உணவு தட்டுப்பாடுமே வடகொரிய மக்களை இதுபோன்ற கடல் மரணத்திற்கு தள்ளப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!