500 அடி உயரத்திலிருந்து விழுந்த16 வயது சிறுவன் நொடி பொழுதில் உயிர் தப்பியது எப்படி….?

அமெரிக்காவின் ஆரெகன் மாநிலத்திலுள்ள மவுண்ட் ஹூட் (Mount Hood)மலையில் ஏறும் முயற்சியின் போது 16 வயது இளைஞர் 500 அடி கீழே விழுந்தார்.ஆனால், உயிர் சேதம் ஏதும் இன்றி வெறும் காயங்களுடன் உயிர் தப்பினார். ஆரெகனில் மலையுச்சியை எட்ட வேண்டும் என்று நண்பர்களுடன் கனடாவுக்குச் சென்றிருக்கிறார் குர்பஸ் சிங்.

ஆனால், மலையில் ஒரு பகுதியைக் கடக்கும்போது கைப்பிடி தவற, இளைஞர் 500 அடி கீழே விழுந்தார். 11,250அடி உயரம் எட்டும் உச்சியைக் கொண்ட எரிமலையிலிருந்து அவர் மீட்கப்பட்டார்.இந்நிலையில்,அந்த வட்டாரத்திலுள்ள மருத்துவமனையில் சிங் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார். இதனை தொடர்ந்து, சிங்கின் தந்தை தற்போது உடல் குணமடைந்ததும் மகனுடன் மீண்டும் எரிமலையில் ஏறத் திட்டமிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!