ராஜபக்ஷக்களுடன் இணையமாட்டேன்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தான் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார். லங்கா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்னவின் நலம் விசாரித்த பின்னர், மேவின் சில்வா ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனை கூறினார்.

போட்டியிடும் சின்னம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளேன். இலங்கையின் எந்த பகுதியில் போட்டியிட்டாலும் நான் வெற்றிப்பெறுவேன். நான் சிங்கள பௌத்தன். பௌத்த தர்மத்திற்கமைய வாழ்ந்த தர்மபால மன்னன் மாட்டு இறைச்சி உண்பதற்கு எதிரானவர். அதேபோல் நானும் மாடுகளை கொலை செய்து விற்பனை செய்வதற்கு எதிரானவன். அதனை செய்வதை தடுப்பதே எனது பிரதான கடமை.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டை சரியான முறையில் நிர்வகித்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மக்கள் துன்பத்தை எதிர்கொண்டால் நான் மக்கள் பக்கமே இருப்பேன்.எனினும் அரசியல் ரீதியாக மீண்டும் ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்பட போவதில்லை´ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!