பற்பசையில் பயன்படுத்தப்படும் ரசாயனத்தால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும்: – ஆய்வில் தகவல்

பற்பசை எனப்படும் ‘டூத் பேஸ்ட்’ மக்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகி விட்டது. அதில் ‘டிரைகுளோசன்’ என்ற நுண்ணுயிர் எதிர்ப்பு ரசாயன பொருள் உள்ளது. இவை பார் சோப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இது பாக்டீரியாவை கட்டுப்படுத்துவதால் பெருங்குடல் புற்று நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டிரைகுளோசன் ரசாயனத்தை எலிகளின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது எலிகளுக்கு பெருங்குடல் புற்று நோய் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டிரைகுளோசன் ரசாயனம் பெருங்குடலில் சுழற்சி மற்றும் அவை சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கி அதன் மூலம் புற்றுநோயாக மாறுவது கண்டறியப்பட்டுள்ளது. ‘டிரைகுளோசன்’ என்ற ரசாயன பொருள் மக்கள் பயன்படுத்தும் 2 ஆயிரம் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!