காதலனை நம்பி வந்து பிணமான பெண் நடந்தது என்ன..!

தமிழகத்தில் காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறி சென்ற பெண் ஒருவர் உடல் முழுவதும் சூடு போட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள செட்டியாபத்தை சேர்ந்த தம்பதி சக்திவேல் – வசந்தா. இவர்களுக்கு கலைச்செல்வி என்ற மகள் உள்ளார்.

கலைச்செல்வியின் தந்தை சக்திவேல் மதுவுக்கு அடிமையாகி அடிக்கடி வீதியில் விழுந்து கிடந்ததால், குழந்தைகளை காப்பாற்ற தாய் வசந்தா திருப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டதாகவும், கலைச்செல்வி தந்தையுடன் செட்டியாபத்தில் வசித்து வந்துள்ளார்.அப்போது கலைச்செல்வி உடன்குடி பகுதியில் இருக்கும் செல்போன் கடைக்கு வேலைக்கு சென்ற போது, தூத்துக்குடியைச் சேர்ந்த அய்யப்பன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

கலைச்செல்வி தன்னுடைய தாயை பார்க்க வேண்டிய விரும்பியதால், ஆசைவார்த்தை கூறிய அய்யப்பன் அவரை திருப்பூருக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.இதனால் கலைச்செல்வி திருப்பூருக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில், சனிக்கிழமை அதிகாலை செட்டியாபத்து பகுதியில் குற்றுயிரும் குலைஉயிருமாக கலைச்செல்வி வீதியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவரது உடலில் சிகரெட் சூடு காயங்களும், முகம் மற்றும் உடலில் அடித்து துன்புறுத்திய காயங்களைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அதன் பின் அவரிடம் பொலிசார் விசாரித்தபோது, தன்னை திருப்பூருக்கு அழைத்துசென்ற அய்யப்பன் இரு தினங்கள் நன்றாக பழகி விட்டு ஒரு அறையில் அடைத்து வைத்து சூடுவைத்தும், அடித்து உதைத்தும் சித்ரவதை செய்தார். தலைமுடியை வெட்டி துன்புறுத்தினார்.

ஒரு கட்டத்தில் அவனிடம் இருந்து தப்பி வீட்டிற்கு பசியும் பட்டினியுமாக வீட்டிற்கு வந்ததாக கூறியுள்ளார். ஆனால் அய்யப்பன் ஏன் அப்படி அடித்து துன்புறுத்தினார் என்பது குறித்து அவரால் கூற முடியவில்லை, இதனால் தொடர் சிகிச்சைக்கு பின்னர் முழு விசாரணை நடத்தினால் மட்டுமே அவருக்கு நேர்ந்த கொடுமைக்கான காரணம் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்பப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!