பொலிஸ் அதிகாரி பதவியிறக்கம்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரான சஞ்ஜீவ பண்டாரவை தற்காலிகமாக, பதவி இறக்கம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றும் சஞ்ஜீவ பண்டாரவை பொலிஸ் அத்தியட்சராக பதவி இறக்கம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அது குறித்து அவரது சீருடையில் உள்ள ஒரு நட்சத்திரத்தை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அரிய முடிகின்றது.

ஈஸ்டர் ஞாயிறு தககுதல்கள் இடபெற்றபோது, சஞ்ஜீவ பண்டார கொழும்பு வடக்கு பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய நிலையில், முன் கூட்டி உளவுத் துறை வழங்கிய தகவல்களை அவர் கணக்கில் கொள்ளாது செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!