நிர்பயாவின் வழக்கில் இறுதி தீர்ப்பு..!!

நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடந்த 2012ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். அப்போது தொடக்கம் நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வந்தது.அக் குற்றவாளிக்கு துக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படாமல் இதுவரை காலமும் வழக்கு நடைப்பெற்ற வருகிறது.நிர்பயாவின் பெற்றோர் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்தனர்.இது தொடர்பான வழக்கு நேற்று நடைப்பெற்றது.அப்போது நிர்பயாவின் தாயை பார்த்து குற்றவாளி முகேஷ்சிங்-ன்வுடைய தாய் எனது மகனுக்கு உயிர் பிச்சை என்று கேட்டுள்ளார்.

முகேஷ்சிங்-ன் இன் தாயை பார்த்து நிர்பயாவின் தாய் அவள் என்னுடைய மகள் நான் எப்படி இந்த குற்றத்தை மன்னிக்க முடியும் . 7 வருடங்களாக இதற்காக நான் காத்திருக்கிறேன்என்று கூறியுள்ளார்.இதற்கு பிறகே நீதிபதி வழக்கை ஆரம்பித்துள்ளார். அரசு தரப்பு வழக்குறிஞர், குற்றவாளி தரப்பில் தற்போது வரை தண்டனை நிறுத்தவோ, அல்லது தண்டனை குறைப்பது குறித்த மனுக்கள் எதுவும் நிலுவையில் இல்லை என்று வாதிடப்பட்டது.

வாதங்கள் அணைத்தையும் கேட்ட நீதிபதி அதன் பிறகு 14 நாட்களுக்குள் குற்றவாளி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படலாம் எனவும் ஜனவரி 22ம் திகதி காலை 7 மணிக்கு நான்கு குற்றவாளிகளையும் துக்கிலிட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!