சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடத் தயார் – சாலிய பீரிஸ்

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடத் தயாராக இருப்பதாக காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோருக்கான பணியகத்தின் மூன்றாவது பொது கலந்துரையாடல் அமர்வு நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் இந்த அமர்வு இடம்பெற்ற போது, செயலகத்துக்கு வெளியே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

காணாமல் போனோருக்கான பணியகத்தின் மீது தமக்கு நம்பிக்கையில்லை என்றும், சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை முதலில் வெளியிடுமாறும் அவர்கள் தெரிவித்தனர்.

இவர்களுடன் பேச்சு நடத்திய காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ், எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!