சந்திரிகா என்றால் அஞ்சுகிறார்கள்!

சந்திரிகா என்று கூறினாலே அனைவரும் பயப்படுகின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபில்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 121வது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று காலி முகத்திடலில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு சந்திரிகா மலரஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

“ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபில்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஜனன தினம் அனுஷ்டிப்பிற்கு சுதந்திர கட்சியால் ஏற்பாடு செய்திருந்த போதிலும் அதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனது தந்தையின் ஜனன தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் எனக்கு அது தொடர்பில் அறிவிக்கவில்லை.எனவே வழமை போன்று நான் எனது சகோதரியுடன் வருகை தந்து மலரஞ்சலி செலுத்தினேன். சந்திரிகா என்றால் அனைவரும் பயப்படுகின்றனர். அது நோயாகும். அந்த நோய்க்கு மருந்து கிடையாது” என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!