ரஷியாவில் பரிதாபம்: கடும் குளிரால் 7 மாத குழந்தை பலி!

ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹபார்வ்ஸ்க் பிராந்தியத்தை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 7 மாத ஆண் குழந்தை நல்ல காற்றை சுவாசித்து தூங்கவேண்டும் என்பதற்காக வீட்டில் உள்ள பால்கனியில் அமரவைத்தனர். அப்போது அந்த பகுதியில் கடும் குளிர் நிலவியது. 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கே இருந்தது. குளிரில் அந்த குழந்தை அயர்ந்து தூங்கிவிட்டது. இதனால் பெற்றோர் குழந்தையை அப்படியே விட்டுவிட்டு தங்கள் வேலையை பார்க்க சென்று விட்டனர். 5 மணி நேரத்துக்கும் மேலாக தனிமையில் விடப்பட்ட அந்த குழந்தை கடும் குளிரால் பரிதாபமாக இறந்தது. ஹைப்போதர்மியாவால் குழந்தை உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. ஹைப்போதர்மியா என்பது கடும் குளிரினால் உடலின் வெப்பநிலை மிகவும் குறையும்போது ஏற்படுகிறது.

இதுகுறித்து அந்த பிராந்தியத்தின் சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இங்கு நிலவும் கடும் குளிரினால் யாரையும் தனியே விடுவது ஆபத்து. குறைந்த பட்ச வெப்பநிலையால், குழந்தைகள் விரைவில் பாதிக்கப்படுவார்கள், அதனால் எப்போதும் குழந்தைகள் கண்காணிக்கப்படவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே குழந்தையை பால்கனியில் தனிமையில் விட்டு சென்ற பெற்றோர் மீது போலீசார் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!