ஒரு படி சறுக்கியது இலங்கை கடவுச்சீட்டு!

சிறந்த கடவுச்சீட்டுக்களை கொண்டுள்ள 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இலங்கை 97ஆவது இடத்தில் இருப்பதாக சுதந்திரமான பயணங்களுக்காக சர்வதேச குறியீடு தெரிவித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டு கடந்த ஆண்டு 96ஆவது இடத்தில் இருந்தது. இந்தமுறை ஒரு படி குறைந்துள்ளது. எனினும், சிறந்த பயணத்தை கொண்டுள்ள நாடு என்ற ரீதியில் 10 வீதத்தை தக்கவைத்துள்ளது.

சிறந்த கடவுச்சீட்டை கொண்டுள்ள நாடு என்ற வகையில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்கள் விசா இன்றியும் மற்றும் சென்று இறங்கிய பின் விசா அனுமதிகளை வசதிகளை 191 நாடுகள் வழங்கியுள்ளன. இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்கள் 190 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.

தென் கொரியாவும் ஜெர்மனியும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்நாடுகளின் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்கள் 189 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.

இத்தாலியும் பின்லாந்தும் 4ஆவது இடத்தில் உள்ளதுடன் இந்நாடுகளின் கடவுச்சீட்டுக்களை கொண்டுள்ளவர்கள் 188 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும். 5ஆவது இடத்தில் ஸ்பெயின், லக்ஸ்சம்பேர்க், டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளன. இந்நாடுகள் 187 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும். சுவீடன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் 6ஆவது இடத்தில் உள்ளதுடன் இந்நாடுகள் 186 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும்.

சுவிசர்லாந்து, போர்த்துக்கல், நெதர்லாந்து, அயர்லாந்து, ஒஸ்ரியா ஆகிய நாடுகள் 7ஆவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகள் 185 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும். அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, கிறீஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகள் 8வது இடத்தில் உள்ளன. இந்நாடுகளின் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்கள் 184 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.

9ஆவது இடத்தில் நியூசிலாந்து, மால்டா, செக் குடியரசு, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ள. இந்நாடுகளின் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்கள் 183 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும். 10வது இடத்தில் ஸ்லோவோக்கியா, லித்துவேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் உள்ளன. இந்நாடுகளின் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்கள் 181 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.

ஏனைய ஆசிய நாடுகளில் மாலைதீவு வலுவான நாணயத்தை கொண்டுள்ளதுடன் அந்நாட்டு மக்கள் 85 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.

இந்தியா 84ஆவது இடத்திலும் வியட்நாம் 88ஆவது இடத்திலும் உள்ளன. எத்தியோப்பியா மற்றும் தென் சூடான் நாடுகள் இலங்கை கடந்தாண்டு இருந்த 96ஆவது இடத்தில் உள்ளன.

மிகவும் மோசமான கடவுச்சீட்டை கொண்டுள்ள நாடுகள் வரிசையில் முறையே வடகொரியா, சூடான், நேபாளம், பாலஸ்தீனம், லிபியா, ஏமன், சோமாலியா, பாகிஸ்தான், சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!