தலைமை யாருக்கு ?- வியாழன்று முடிவு!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை தொடர்பிலான இறுதி முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான விசேட கலந்துரையாடல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்றது. இதன் போதே கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலான இறுதி முடிவை எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!