கருவுக்கு தேசிய தலைவர் பதவி! – ஐதேக புதுத் திட்டம்

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய தலைவராக கரு ஜயசூரியவை நியமித்து பொதுத்தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கப் போவதாக, கட்சியின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.இந்த யோசனை கடந்த வியாழக்கிழமை கட்சியின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு தற்போது பங்காளிக்கட்சிகளின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவும் காணப்படுவார்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!