முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் கமாண்டோ வீரர்களின் பாதுகாப்பு ரத்து – மத்திய அரசு அதிரடி!

முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலிருந்து என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களை முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு, விமானக் கடத்தல் முறியடிப்பு ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட இந்த கமாண்டோ படையினர் இனி அந்தப் பணிகளை மட்டுமே கவனிப்பார்கள்.

என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ள ராஜ்நாத்சிங், அத்வானி, சந்திரபாபு, பாதல் உள்ளிட்ட 13 பேருக்கு இனி சி.ஆர்.பி.எஃப்., சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். 450 கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியிலிருந்து விடுவிக்கப்படுவதன் மூலம், என்எஸ்ஜியின் திறனுக்கு மேலும் வலுசேர்க்கும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!