ஜல்லிக்கட்டு மேல்முறையீடு : சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க, சென்னை உயர் நீதின்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.

இது குறித்து, அவனியாபுரம் விவசாயிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விடுமுறை கால மனுவில், கூறியிருப்பதாவது:

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில், சட்டம் – ஒழுங்கு பிரச்னையின்றி, கடந்த 20 ஆண்டுகளாக, ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, மாவட்ட கலெக்டர் தலைமையில், எட்டு பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதை கவனத்தில் கொள்ளாமல், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மற்றொரு குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இந்த உத்தரவுக்கு தடை விதித்து, கலெக்டர் தலைமையிலான, எட்டு பேர் கொண்ட குழுவின் மேற்பார்வையில், ஜல்லிக்கட்டு நடத்த, உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ‘இந்த மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நேற்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!